வீட்டின் முன்பு கட்டப்பட்ட 10 வெள்ளாடுகள் வெறிநாய் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகின்றார். விவசாய இவர் தனது வீட்டில் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கருப்பையா வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்துள்ளார். அப்போது நள்ளிரவு சமயத்தில் வெறிநாய் ஒன்று கருப்பசாமி வீட்டின் முன்பு இருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 10 வெள்ளாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து மறுநாள் காலையில் ஆடுகள் உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கருப்பசாமி ஊராட்சிமன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் ஆடுகளை பார்வையிட்டு கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்குப்பிறகு உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்ககோரி பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.