Categories
தேசிய செய்திகள்

பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த அல்கா மித்தல்….. ONGC நிறுவனத் தலைவராக தேர்வு….!!!!

ONGC -யின் கடைசி முழுநேர இயக்குநரான சஷி சங்கர் மார்ச் மாதம் 32-ஆம் தேதி 2021 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைக்கால தலைவராக சுபாஷ் குமார் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ONGC நிறுவன தலைவராக அல்கா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ONGC-யில் பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறையின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் 2-வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |