இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி 60 சதவீத மக்களுக்கு செலுத்தியும் எந்த பலனும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதனால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 42 லட்சம் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமர் நப்தாலி பென்னட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் எந்த பலனும் இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். அதாவது 93 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில் 42 லட்சம் ( 60 சதவீதம் பேருக்கு ) மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா புயல் நாட்டை விட்டு ஒழிந்தபாடில்லை. தினசரி பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.