விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த இந்தி நடிகர் சல்மான் கானுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனை இந்தியில் ரீ-மேக் செய்யவிருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களுக்காக இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மாஸ்டர் படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.