மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்துவது தான் இந்த கூட்டத்தின் அஜெண்டா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வெகு நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் குறைந்தபட்ச பென்சன் தொகை 1,000 ரூபாயில் இருந்து 9,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி தொழிலாளர் அமைச்சகத்தின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மேலும் இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் உயர்வு, புதிய ஊழியர் சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.