செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு நேரில் சந்தித்து தான் வற்புறுத்த வேண்டும். நீட் விலக்கில் நாம் வெற்றி பெற முடியும். ஏற்கனவே 16 உயிர்கள் பரிபோயிருக்கின்றன. மருத்துவத் துறையிலே இந்தியாவில் சிறந்து விளங்குவது தமிழ்நாடுதான்.
ஆகையினாலே இந்த அடிப்படையில் நீட் பிரச்சினையில் மத்திய அரசு தன்னுடைய போக்கை…. தன்னுடைய விடாப்பிடியாக இருக்கின்ற விடா கண்டன் போக்கை கைவிட்டு தமிழ்நாட்டு பிரச்சனையிலே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம், அந்த கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி, மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அதில்தான் முடிவெடுக்க வேண்டும். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றால் கூட்டணி தான் முடிவெடுக்க வேண்டும்.
கருப்பு கொடி போன்று ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா என்று கூட்டணியின் முடிவெடுக்க முடியும். ஆர்.எஸ். பாரதி அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார், எல்லா கட்சிகளும் சேர்ந்து… கூட்டணி கட்சிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.
மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் ஆளுநர் அதிகாரத்தை வரையறை செய்யவேண்டும் என்ற சீமானின் கருத்து சரியான கருத்து தான், பல்கலைகழக துணைவேந்தர்களை எல்லாம் வந்து ஆளுநர் நியமனம் செய்யக்கூடாது, அரசுதான் நியமனம் செய்ய வேண்டும். சீமான் கூறியது சரியான கருத்து தான்.