செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பாஜகவுக்கு எதிரான ஒரு சக்தி…. ஒரு வலுவான சக்தியாக திரள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தும். அப்பொழுதுதான் பாஜகவை எதிர்த்து முறியடிக்க முடியும். காங்கிரஸ் இல்லமால் எதிர்க்கட்சி கொண்டுவர வேண்டும் என்பது மம்தா உடைய கருத்து.மோடிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகளை உருவாக்க ஸ்டாலின் முன்னெடுப்பு செய்யணும் என்ற திருமாவளவன் சொன்னதுதான் என்னுடைய கருத்தும்.
மோடி ஜனநாயகத்தை மதிப்பதில்லை என நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி இந்தியாவை வல்லரசாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், அமித்ஷா இந்தியாவின் இரும்பு மனிதர் என்றெல்லாம் சொல்லியதற்கு கருத்து தெரியவித்த வைகோ,
வெண்கல மனிதர், இரும்பு மனிதர், கரும்பு மனிதர் என்று சொல்வதெல்லாம்…. இவர்கள் வந்து வேற வழி இல்லாமல், மத்திய அரசுக்கு காலடியில் கப்பம் கட்ட வேண்டிய நிலைமையில் இருந்தார்கள், அவர்களுக்கு பயந்து போய் இருந்தார்கள். அதனால் மத்திய அரசாங்கத்தை அவர்களை பாராட்டி கொண்டு தான் இருப்பார்கள்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை பாராட்டியுள்ளார். ஆனால் அதிமுக தலைமை விமர்சனம் செய்து வருகின்றது. அதிமுக கட்சிக்குள் நிறைய முரண்பாடுகள் இருக்கு. ஜெயக்குமார் ஒன்று சொல்கிறார்… ராஜேந்திரபாலாஜியா…. அதிகமாக அடிபடுகின்ற பெயர் அந்த பெயர் தான், அவரை பற்றி மற்றவர்கள் வேறு எதோ சொல்கிறார்கள். அவர்கள் கட்சிக்குள்ளேயே ஒரு கருத்தை சொல்வது இல்லையே என விமர்சித்தார்.