Categories
அரசியல் மாநில செய்திகள்

“அட நம்ம அதிமுக எம்எல்ஏவா இது?”…. தலையில பால் குடம்…. கையில் வேப்பிலை…. ஒரே பக்திதா போ….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரி பாளையத்தில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் திருவிழா மார்கழி மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பொங்கல் திருவிழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதற்காக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் ஏராளமானோர் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதற்காக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அந்த விழாவில் திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ கே.என் விஜயகுமார் கையில் வேப்பிலை அடித்து ஆடிக் கொண்டே தீர்த்தக்குடம் எடுத்து வந்தார். அவர் நடனம் ஆடியதை பார்த்த படியே பெண்களும், குழந்தைகளும் ஊர்வலமாக வந்தனர்.

Categories

Tech |