Categories
அரசியல் மாநில செய்திகள்

பம்பரமா சுத்தி வேலை செய்றாரு முதல்வர்….. 5 ஆயிரமும் கொடுத்துருவாரு பாராட்டிய செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சித்தலைவி அம்மாவுடைய அரசு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியதோ…. முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் காலத்தில் எப்படி கொரோனா கட்டுபடுத்தப்பட்டதோ அதுமாதிரி ஒரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கப் வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மட்டும் பணியாற்றினால் மட்டும் போதாது. இந்தக் கொரோனாவை தடுக்கின்ற பணியில்… இந்த கொரோனாவை ஒழிக்கின்ற பணியில்…. புதிய ஒமைக்ரான் தொற்றை அறவே இல்லாத அளவிற்கு தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேண்டுகோள்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொங்கலுக்கு 5000 கொடுக்க சொன்னார்கள். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நிச்சயமாக அவர்கள் கொடுப்பார்கள் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சட்டமன்றத்தின் எதிர்பார்க்கிறோம்.மாண்புமிகு முதல்வர், அவருடைய புதல்வர், அவருடைய சகோதரி, திமுக உடைய முக்கிய தலைவர்கள் அனைவருமே கடந்த ஆண்டு 2,500 ரூபாய் கொடுத்ததை 5,000 ரூபாய் கொடுக்கவேண்டும், கொரோனா தொற்று காலம் என்றுசொன்னார்கள்.

இந்த நேரத்தில் எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால் அவர்கள் சொன்னதை போல இன்றைக்கு புதியவகை கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிறது.மற்றுமொரு ஊரடங்கு வருமா ? என்று மக்களெல்லாம் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் எல்லாம் பயந்து கொண்டிருக்கிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொன்னதை ஆளுகின்ற வாய்ப்பை கொடுத்த தமிழக மக்களுக்கு நிச்சயமாக அவர்கள் கொடுப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |