‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் பிழை’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது .
இதில் நயன்தாரா இப்படத்தில் தனது சொந்தக்குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் பிழை’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.இசையமைப்பாளர் அனிருத் இசையில் ரவி மற்றும் சாஷா திருப்பதி பாடலை பாடியுள்ளனர்.இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.