செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையை பொருத்தவரை இன்றைக்கு தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து ஒரு 600 அளவிற்கு பூஜ்ஜியத்தை நோக்கி பயணித்து வந்த நிலையில் மீண்டும் பரவத் தொடங்கி 1489 வரை உயர்ந்திருக்கிறது. இன்னுமும் தினந்தோறும் உயரக் கூடும் என்ற அச்சமும் கூடுதலாக இருக்கிறது. எனவேதான் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கூடுதலாக இருப்பது என்பது சென்னையிலும், செங்கல்பட்டிலும் அதிகமாக இருக்க கூடிய நிலையில் நம் ஆணையருக்கு பல்வேறு வழிகாட்தல் நெறிமுறைகளை முதல்வர் சார்பில் எடுத்துக் சொன்னதன் விளைவாக ஆணையர் அவர்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
உடனடியாக ஆயிரம் கோவிட்காக தன்னார்வலர்களை நியமிக்க பணியினை செய்திருக்கிறார்கள், அதற்கான உத்தரவையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் இருக்கின்ற 200 வார்டுகளுக்கும், ஒரு வார்டுக்கு 5 பேர் அந்த தன்னார்வலர்களை பணி அமர்வதற்கான உத்தரவிட்டிருக்கிறார். இந்த 5 பேர் இந்த வார்டில் யாருக்கெல்லாம் தொற்று இருக்கிறது. அவர்களுக்கான தேவைகளை இவர்களே நேரடியாக சென்று செய்வது.
தொற்று ஏற்பட்டவர்களை வெளி நடமாட்டத்தில் இருந்து குறைப்பதற்கும், அதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை தன்னார்வலர்கள் செய்கின்ற வகையில் ஒரு ஆயிரம் பேரை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு இருக்கின்றார். அதேபோன்று 15 மண்டலங்களிலும் டெலி கவுன்சிலிங் அமைப்பு உருவாக்குவதற்கான நடைமுறைகளும் இன்று ஏற்படுத்தி இருக்கிறார்கள். டெலி கவுன்சிலர் சென்டர் என்று சொல்லக்கூடிய மருத்துவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு அமைப்பாக….
ஒரு குழுவாக உட்கார்ந்து எங்க எல்லாம் இந்த வீடுகளில் வீடுகளில் தனிமை படுத்தப்படுதல், ட்ரிபிள் சி போன்ற இடங்களில் தொற்றாளர்கள் இருக்கின்றார்களோ அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், அதுமட்டுமல்ல… வீடுகளில் இருப்பவர்கள் கூட யாருக்காவது இந்த மருத்துவத்தில் கொரோனா சம்பந்தமான ஒமைக்ரான் சம்பந்தமான சந்தேகங்கள் இருக்குமோ அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் சந்தேகங்களுக்கு தீர்த்து வைக்கும் வகையில் டெலி கவுன்சிலிங் சென்டர்களை 15 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒன்று என உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுத்து இருக்கிறார்கள் என விளக்கினார்.