Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது  குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனைப் போலவே தமிழகத்திலும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |