தமிழ்நாடு அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள் :
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் ஊராட்சிக்கு ஒரு காலியிடம் வீதம் மொத்தம் 198 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் தன்மை :
விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பிற உற்பத்தியாளர் மற்றும் தொழில் முனைவோர் குழுக்களை ஊக்குவித்தல்.
வங்கிகளின் நிதி உதவி இணைப்பை ஏற்படுத்துதல்.
தொழில் திட்டங்கள் தயாரித்தல்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் இத்திட்ட வட்டார பணியாளர்களுடன் இணைந்து ஊராட்சி அளவில் களப் பணியாற்றுதல்.
கல்வித்தகுதி :
பட்டப்படிப்பு தேர்ச்சிபெற்று Android Mobile பயன்படுத்த தெரிந்து இருக்க வேண்டும். இப்பணிக்கு தொடர்புடைய கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டி நெறிமுறைகளின்படி தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பிற தகுதிகள் :
இப்பணிக்கான தகுதிகள் திட்டம் செயல்படும் மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி மற்றும் கடம்பத்தூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 198 ஊராட்சிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் / உறுப்பினர் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
25 முதல் 45 வயதிற்குள் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
தேர்ந்தெடுக்கப்படும் நபா்கள் மாதத்திற்கு அதிகபட்சம் 20 நாட்கள் தொடர்புடைய ஊராட்சிகளில் களப்பணியாற்ற வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மதிப்பூதியம் / ஊக்கதொகையாக நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டி நெறிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி கிராம வறுமை ஒழிப்புசங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாகவோ அல்லது நேரிலோ வட்டார திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
06.01.2022
IMPORTANT LINKS
https://drive.google.com/file/d/1262YVcI3Pz85Uix3cDf9w2wzwLpnvOxo/view