செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியும், சென்னை மாநகர காவல் துறையும் ஒருங்கிணைந்து முக கவசம் அணிவது என்பது ஒட்டுமொத்த மாநகர் பகுதிகளில் 35 சதவீதம் பேர் மட்டுமே முககவசம் அணிகின்ற நிலை என்பது இருந்து கொண்டிருக்கிறது. பயம் தெளிந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும், இது தேவையற்ற தெளிதல். முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
ஏனென்றால் இந்த ஒமிக்ரான் பாதிப்பு என்பது ஏற்கனவே ஒருவருக்கு இத்தனை விகிதம் பாதிப்பு என்று இருந்தது இப்போது 3, 4 மடங்கு கூடுதலாக பரவக்கூடிய ஒரு வேகமான வைரஸ் என்ற காரணத்தினால் எல்லோரும் இந்த முக கவசம் அணிவது 100% அவசியம் என்கிற வகையில், இரண்டு துறைகளும் ஒன்றிணைந்து அதை கட்டாயப்படுத்தி முகக் கவசம் அணியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராத தொகையை கூடுதலாக்கி அதை நடைமுறை படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
காவல்துறையின் உயர் அதிகாரிகளும் வந்திருக்கின்றார்கள். இந்த இரு துறைகளும் சேர்ந்து இதை உடனடியாக செய்ய இருக்கிறது. அதேபோல் ஏற்கனவே கடந்த அலையில் மாநகராட்சியின் சார்பில் மண்டலத்திற்கு 2, 3 என்ற வகையில் கார்களின் மூலம் ஒரு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஏனென்றால் தொற்று ஏற்பட்டவர்கள் ஆட்டோவிலேயோ, பேருந்திலேயோ ஸ்கீரினிங் சென்டருக்கு மருத்துவமனைக்கும், மருத்துவமனையில் இருந்து ட்ரிபிள் சி-க்கும் போகிறபோது அவர்கள் மூலம் பரவல் கூடுதலாகும் ஒரு சூழல் ஏற்படும்.
கடந்த காலங்களில் இருந்தது. அப்பொழுதுதான் சென்னையில் முதல்முறையாக நம் ஆணையர் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திருப்பூரிலும், கோவையிலும், ஈரோட்டிலும் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.