துபாயில் இந்தியர் ஒருவருக்கு புத்தாண்டை முன்னிட்டு வாங்கிய லாட்டரி சீட்டில் 50 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது.
இந்தியாவிலுள்ள கேரளா தான் ஹரி தாஸ் என்பவரின் பிறப்பிடமாக உள்ளது. ஆனால் இவர் கடந்த 10 வருடங்களாக துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனையடுத்து ஹரிதாஸ் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு தற்போது ரூபாய் 50 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இந்த மெகா பரிசு தொகையை எதிர்பார்க்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.