Categories
தேசிய செய்திகள்

மீண்டும் “Work From Home”…. இனி வீட்டில் இருந்தே வேலை பாருங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3ஆம் அலை துவங்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை சுமார் 6 மாதங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |