Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதை போலவே திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும். விடைத்தாள்களை மற்ற பள்ளிகளுக்கு பரிமாற்றம் செய்து திருத்திக் கொள்ள வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதி பள்ளி விடைத்தாள்களை அதே வகை பள்ளிகளுக்கே மதிப்பீட்டிற்கு வழங்கக் கூடாது. விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பள்ளி கல்வித்துறையின் “எமிஸ்” மேலாண்மை தளம் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வழிகள் பிறகு அறிவிக்கப்படும். திருப்புதல் தேர்வுகளை புகாருக்கு இடமின்றி நடத்தி முடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகி பொதுத் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தலாம் என்ற நோக்கத்தில் இந்த தேர்வு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |