நியூசிலாந்து அணிக்கெதிரானமுதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேசம் அணி வரலாறு சாதனை படைத்தது.
நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 328 ரன்கள் குவித்தது. இதன்பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி 176.2 ஓவரில் 458 ரன்கள் எடுத்தது. இதில் கடந்த 12 வருடங்களில் நியூசிலாந்து மண்ணில் அதிக ஓவர்கள் எதிர்கொண்ட வெளிநாட்டு அணி வங்காள தேசம் தான்.
நியூசிலாந்து அணி சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட், நீல் வாக்னெர் 3 விக்கெட், டிம் சவுதி 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 74.4 ஓவரில்அனைத்து விக்கெட் இழப்புக்கு 169 ரன்னில் சுருண்டது. இதனால் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவரில் இலக்கை எட்டி வரலாற்று வெற்றி பெற்றது.