பிக் பேஷ் டி20 போட்டியில் நேற்று நடந்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 45 ரன்கள் குவித்தார்.
சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் ஹெய்டன் கெர் 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் பிறகு 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக டேனில் கிறிஸ்டியன் 73 ரன்கள் எடுத்தார். இறுதியாக சிட்னி சிக்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்னில் சுருண்டது .இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.