Categories
சென்னை மாவட்ட செய்திகள்

35 லட்ச ரூபாய் வாடகை பாக்கி….. கடைக்காரர்களின் அலட்சியம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

35 லட்ச ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் சி.எம்.டி.ஏ-வுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 கடைகளுக்கு சில ஆண்டுகளாக வாடகை தராமல் 35 லட்ச ரூபாய் வரை பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ஆனாலும் கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தாததால் 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து வாடகை பாக்கி செலுத்திய பிறகு கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |