கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெற உள்ளதால் வைகை பல்லவன் விரைவு ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கருங்காலி யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில்களின் நேரம் மற்றும் பாதை மாற்றி விடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 5, 6 தேதிகளில் காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னை எழும்பூரிலிருந்து ஜனவரி 5 மற்றும் 19ஆம் தேதி காரைக்குடிக்குச் செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படாமல் மாலை 6.30 மணிக்கு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலிருந்து புதுடெல்லிக்கு ஜனவரி 5 மற்றும் 19ம் தேதிகளில் காலை 9 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் விழுப்புரம் ,காட்பாடி ,பெரம்பூர், வழியாக திருப்பி விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.