தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.