Categories
மாநில செய்திகள்

பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?…. அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்த இபிஎஸ்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்ட ஒழுங்கை சரிசெய்ய இதுவரை கவனம் செலுத்தவில்லை. எனவே தமிழகத்தில் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.  தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. கல்விநிலையங்களில் அருகில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

அதனை தொடர்ந்து 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகையை வழங்க திமுக அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகையை கூட மக்களுக்கு திமுக அரசு வழங்க வில்லை.  அதுமட்டுமில்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. ஏழை,எளிய மக்கள் மீது அக்கறை இல்லாத திமுக அரசு அதனை மூடியுள்ளது. மேலும் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர்கதையாக உள்ளது.

Categories

Tech |