3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த 55 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் கௌதம புத் நகர் நொய்டா பகுதியில் வசித்து வருபவர் நிராஜ் ஷர்மா. இவர் தனது மகன் வழி பேத்தியான மூன்று வயது சிறுமியுடன் அந்தப் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். இந்நிலையில் நிராஜ் சர்மா தனது பேத்தியை காணவில்லை என அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது கடந்த 28ம் தேதி அவருடைய வீட்டில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிதாக கட்டி வரும் கட்டிடம் ஒன்றில் அந்த சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நிராஜ் சர்மாவின் வீட்டிற்கு ஹேமந்த் என்பவர் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. மேலும் இந்த ஹேமந்த் நிராஜ் ஷர்மாவின் கள்ளக்காதலர் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. இந்த மூன்று வயது குழந்தை நிராஜ் சர்மாவின் மகன் வழி பேத்தி ஆவார்.
மேலும் நிராஜ் சர்மாவின் மகன் ஒரு கொலை வழக்கில் சிறையில் இருப்பதாகவும் அவர் வெளியே வந்தவுடன் குழந்தையை ஒப்படைத்து விட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த குழந்தை இவர்களுடைய திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் ஹேமந்த் இந்த குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.