தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய நபரை லண்டன் காவல்துறை அதிகாரிகள் 20 வருடங்களுக்குப் பின்பாக 2021 ல் கைது செய்துள்ளார்கள்.
லண்டனில் கடந்த 2001 ஆம் ஆண்டு zafar என்ற நபர் தன்னுடைய மனைவி விவாகரத்து கேட்ட சம்பவத்திற்காக அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நபர் நைசாக தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கும் தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து முழு தகவலையும் அறிந்த காவல்துறை அதிகாரிகள் 2005 ல் முதன்முறையாக zafar ன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ஆனால் பாகிஸ்தானுடன் இங்கிலாந்திற்கு எந்தவித குற்றவாளிகள் ஒப்பந்தமும் இல்லாததால் அவரை அங்கிருந்து லண்டனுக்கு அழைத்து வருவது மிகவும் கடுமையான செயலாக இருந்துள்ளது.
இருப்பினும் சுமார் 20 வருடங்களுக்கு பின்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் zafar ஐ கடந்த 2021 ல் விசாரணை காரணமாக லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவ்வாறு லண்டனில் காலடி வைத்த zafar ஐ அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் உடனே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.
ஆனால் zafar தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். அவ்வாறு குற்றத்தை மறுத்த zafar கு எதிராக அரசு வக்கீல்கள் அனைத்துவித ஆதாரத்தையும் கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த கொலை குற்ற வழக்கு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதியிலிருந்து விசாரணை செய்ய தொடங்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.