Categories
அரசியல்

விசிக எதிர்க்க….  அதிமுக உரையை புறக்கணிக்க…. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே…! அடுத்தது திமுகவா….!!!

சென்னையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை எதிர்த்து அதிமுக உறுப்பினர்களும், விசிக எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரானது இன்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. இது தான், தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டம். எனவே ஆளுநர் ஆர் என் ரவி, கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். அவர் உரையாற்றிய போது அதிமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காததற்க்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அக்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள். இதுபற்றி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சிந்தனைச்செல்வன் கூறியதாவது, “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டிய மசோதா, தற்போது குடியரசு தலைவரின் மாளிகைக்கு சென்றடைந்திருக்கவேண்டும்.

ஆனால், அது ஆளுநர் அலுவலகத்திலேயே இருக்கிறது. இது அவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகம். ஆளுநர் பேசிய உரையை எதிர்த்து, நாங்கள் வெளியேறவில்லை, ஆளுநரையே  எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வது தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்களிடம்  கூறப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிவடைந்து இருக்கிறது. இந்நிலையில், திமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கவிருக்கிறது என்று கொறடா கோவி.செழியன் கூறியிருக்கிறார்.

Categories

Tech |