மகரம் ராசி அன்பர்களே..!! இன்று வெளியூறு தகவல்கள் சாதகமான தகவல்களாக உங்களுக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் ரொம்ப வேகமாக நடைபெறும். தடைகள் விலகி செல்லும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சகோதரர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரவு சிறப்பாக இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் அதை நீங்கள் தாராளமாக செலவு செய்து விடுவீர்கள். கூடுமானவரை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று தொழிலாளர்களால் உங்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய இடத்திற்கு தொழிலை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் போன்றவை ஏற்படும். இன்று வீடு சொத்துக்கள் வாங்கக் கூடிய சூழலும் இருக்கும். வீடு மாற்றங்கள் செய்யக்கூடிய சூழ்நிலையும் இன்று இருக்கும். இன்று அனைவரின் ஆதரவும் உங்களுக்கு பெருகும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ரொம்ப சிறப்பாக நடக்கும். பண பரிவர்த்தனையில் மட்டும் எப்பொழுதுமே சரி மகர ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடைய பார்வையில் படும்படி பணத்தை மட்டும் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் இழப்பு. மிகப்பெரிய அளவில் திருஷ்டி ஏற்படுத்திவிடும். பார்த்து புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். காதலர்களுக்கு இன்று அன்னியோன்யம் அதிகரிக்கும். இன்று திருமண முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுபோலவே மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தடைகள் விலகி செல்லும். உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்