இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனாபரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி, மாஸ்க் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ரயில்வே வாரியம் அலுவலகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் சில உத்தரவுகள் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே வாரியத்தின் அலுவலகமான ரயில் பவனில் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இரண்டு தடுப்பூசியும் செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் ரயில் பவன் அலுவலகத்திற்க்குள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள் சொந்தமாக விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.