பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்திருக்கிறது.
உத்திரபிரதேசம் உள்பட சுமார் 5 மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில், உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மொத்தமாக இருக்கும் 403 தொகுதிகளில் பாஜக, 230 இலிருந்து 249 தொகுதிகள் வரை வெற்றியடையும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின்படி, இரண்டாவது இடத்தில் இருக்கும் சமாஜ்வாடி கட்சி, 137 இலிருந்து 152 சீட்டுகள் வரை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி, மூன்றாவது இடத்தையும், காங்கிரஸ் 4வது இடத்தையும் பெற வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், கடந்த 1985ஆம் வருடத்திற்கு பின் அம்மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்த முதல் முதலமைச்சர் என்ற பெருமை யோகியை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.