பெண் குறித்து அவதூறாக பேசிய ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் வசிக்கும் ரவுடி பேபி சூர்யா என்பவர் டிக் டாக் செய்து பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை சூர்யாவும், அவரது நண்பரான சிக்கந்தர் என்பவரும் தகாத முறையில் விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்ணும், அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்படி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.