Categories
அரசியல்

இப்பவே இப்படியா….? மோடி வருகைக்கு கிளம்பும் எதிர்ப்பு…. பஞ்சாப்பில் சலசலப்பு….!!

பிரதமர் நரேந்திரமோடி சட்டமன்ற தேர்தலுக்காக பஞ்சாப்பிற்கு வருகை தரும் நிலையில் பல விவசாய அமைப்புகள் அவரின் வருகையை கடுமையாக எதிர்த்துள்ளன.

பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு மோடி வருகை தர இருக்கிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையை பஞ்சாப் மாநிலத்தின் பல விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன.

ஒரு வருடத்தை தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இதில் உயிரிழந்த 700 விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரவேண்டும். மேலும், லக்கிம்பூர் பிரச்சினையில் விவசாயிகள் பலியானதற்கு, காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சரான அஜய் மிஸ்ரா டேனியை, உடனே பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும்  வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இன்று காலையில் ட்விட்டர் பக்கத்தில், #GoBackModi என்ற ஹேஸ்டேக் வைரலானது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பாஜகவினர், இதற்கு போட்டியாக களம் இறங்கி, #PunjabwelcomesModiji, #ModiwithPunjab, #NawaPunjab Bhajpade Baal மற்றும் #Modi4Punjab  போன்ற ஹேஸ்டேக்குகளை அனைத்து இணையத்தளங்களிலும் வைரலாக்கி வருகிறார்கள்.

பிரதமர் மோடி வருகை தருவதை பாகிஸ்தானின் சில இணையதள கணக்குகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்மறையான ஹேஸ்டேக்குகளை வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். இதனை தீவிரமாக கண்காணிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், பஞ்சாப் மாநிலத்தில், இணையதளங்களில் விவசாயிகள், மோடியின் வருகையை எதிர்க்கவில்லை என்றும் இளைஞர்கள் தான் இவ்வாறான செயல்களை செய்து வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |