Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு…. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!

நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் 7 நாட்களுடன் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ளலாம். அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவை இல்லை. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |