பிளஸ் டூ வகுப்பு தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தேவையில்லாத வதந்திகளால் மாணவர்கள் தங்கள் கவனத்தை சிதற விடவேண்டாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் CBSE ஒரு பொது அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
CBSE வெளியிட்டுள்ள இந்த அறிவுறுத்தலின் 2022-ம் ஆண்டுக்கான 2-வது வாரியத் தேர்வு முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முக்கியத் தேர்வு முறை மாற்றம் குறித்து “BREAKING NEWS” போன்ற சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி சில ஆன்லைன் ஊடகங்கள் தவறான வதந்திகளை பரப்பி மாணவர்களையும்,பெற்றோர்களையும் தவறாக வழி நடத்துவது தொடர்பாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் கூறியுள்ளது.
இந்த வருடம் CBSE இரண்டாம் பருவத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போலவே நடைபெறும் என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான CBSE கால 2 வாரியத் தேர்வு மார்ச் மாதம் 2022 முதல் ஏப்ரல் 2022- வரை நடைபெற உள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் cbse.gov.in மற்றும் cbseresult.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணைய தளங்களிலும் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். 10 மற்றும் 12-வது முடிவுகள் Digilocker செயலியிலும், Digilocker.gov.in என்ற இணையதளத்திலும் கிடைக்கும். மேலும் இந்த முறையும் UMANG செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் முடிவைத் தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.