Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துரத்தி சென்ற நாய்…. கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு…. 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூராண்டான்பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது நாய் ஒன்று அதனை வேகமாக துரத்தியது. இதனால் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடிய பசுமாடு தோட்டத்தில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த பசு மாட்டை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |