வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் விட்டுவிட்டு விதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் மணல்மேடு காரைக்கால் திருவாரூர் மாவட்டம் குடவாசல் உள்ளிட்ட இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.