Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தையை கடித்து குதறிய நாய்கள்…. நிவாரண தொகை வழங்கி ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த 2 வயது குழந்தையின் பெற்றோருக்கு அமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தில்லைநகர் விரிவாக்க பகுதியில் சபரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அயனேஷ் என்ற மகன் இருக்கிறான். கடந்த மாதம் கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு தமிழரசி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் பூங்காவிற்கு சபரிநாத் தனது மகனுடன் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த அயனேஷை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறியது.

இதனால் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் சபரிநாத்தின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கியுள்ளார்.

Categories

Tech |