Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றத்தால் கலவர பூமியான நாடு!”….. ராஜினாமா செய்த அரசு…. கஜகஸ்தானில் பரபரப்பு….!!

கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலை ஏற்றத்தால் உண்டான கலவரங்களால் ராஜினாமா செய்திருக்கிறது.

கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன.

இதனையடுத்து, அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நேற்று அந்நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் கையெறி குண்டுகளை வீசினர்.

இந்நிலையில், இன்று Almaty மற்றும் Mangistau ஆகிய மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்கிறேன் என்று ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டார். மேலும், 14 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை ஏற்ற ஜனாதிபதி, துணைப் பிரதமரான, Alikhan Smailov என்பவரை நாட்டின் இடைக்கால பிரதமராக நியமித்திருக்கிறார். மேலும், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்பு கலவரத்தால் பாதித்த பகுதிகளின் நிலை சரியாகி வருகிறது என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

Categories

Tech |