Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின்கம்பிகள்…. பசு-கன்றுக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து பசுவும், கன்றும் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதம்பதி பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அப்பகுதியில் இருக்கும் முருகன் கோவில் அருகே உள்ள தோப்பில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் காற்றின் வேகத்தால் மின்சார கம்பிகள் அறுந்து பசு மற்றும் கன்றின் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி பசுவும், கன்றும் இறந்துவிட்டது. இதுகுறித்து அறிந்ததும் தீபாவும், ஊர் பொதுமக்களும் முருகன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பல ஆண்டுகளாக பழுதாகி கிடக்கும் மின் கம்பிகளை சீரமைக்காத மின் வாரியத்தை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மின் கம்பிகளை சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |