Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு….. 126 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு…!!

மக்களவையில் உள்ள 18 எம்பிக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு 2 பேர் மீது மட்டுமே பாலியல் புகார் இருந்த நிலையில் தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 21 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது 16 வழக்குகள் உள்ளன. ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி,எம்எல்ஏக்கள் 7 பேர் மீது பாலியல் வழக்குகள் உள்ளன. 2009 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் 2 பேர் மட்டுமே பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 19 ஆக உயர்ந்துள்ளது.

Image result for rape

மேலும்,மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சிக்கிய 126 பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் அதிகபட்சமாக 66 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட 46 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |