Categories
மாவட்ட செய்திகள்

ஏன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகல….. கணவன் தற்கொலை… மனைவி கவலைக்கிடம்…!!

ஒரு சிறிய பிரச்சனையில் பூதாகரமாக போட்டி போட்டுக்கொண்டு கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 7 வயது மகன் கமலேஷ்க்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது காயத்திற்கு சிகிச்சை அளிக்க மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என மனைவி ராதிகாவிடம் கேட்டுள்ளார் தனசேகர். இதனால்,கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் கோபம் கொண்ட தனசேகர் பயிருக்குத் தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Image result for பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்

இதனால்,அதிர்ச்சி அடைந்த ராதிகா தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி பூச்சி மருந்தை குடித்துள்ளார். கனவனும் மனைவியும் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். ராதிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கேட்டதால் ஏற்பட்ட சிறிய பிரச்சனையால் தந்தை தற்கொலை செய்துகொண்ட நிலையில் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Image result for பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்

 

இந்த விவகாரம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் ஏட்டிக்குப் போட்டியான முட்டாள்தனமான நடவடிக்கையால் இரண்டு குழந்தைகளின் நிலைதான் பரிதாபம் ஆகியுள்ளது.

 

Categories

Tech |