தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி
பொது போக்குவரத்திற்கு தடை
மெட்ரோ ரயில்கள் இயங்காது
உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதி
உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை
மின் வணிக நிறுவனங்கள் செயல்பட தடை
நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை