நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமல் மற்றும் வடிவேலு போன்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.
இந்நிலையில், பிரபல நடிகரான அருண் விஜய்யும் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும், மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
Hi everyone!!
This is to inform you'll that I have been tested positive for COVID-19. I am currently under home quarantine and following all the safety protocols as per my doctor's advice.
Thanks for all the love..
Stay safe & take care everyone 🙏🏽— ArunVijay (@arunvijayno1) January 5, 2022