Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தொட்டிலில் ஆட வேண்டும் என்ற ஆசை” மூச்சுத்திணறி இறந்த முதியவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!-

தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் பகுதியில் லிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி லிங்கத்தின் மனைவி இறந்து விட்டதால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லிங்கம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அப்போது பேர குழந்தைகள் தூங்கும் தொட்டிலில் தானும் தலை வைத்து ஆட வேண்டும் என்று லிங்கத்திற்கு ஆசை வந்துள்ளது. இதனால் லிங்கம் தொட்டிலில் தலையை மட்டும் வைத்து ஆடியபடி இருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு லிங்கத்தின் கழுத்தை இறுக்கியதால் மூச்சுத்திணறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் லிங்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |