Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு”…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேர்வுகளை கண்டு அச்சமடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கஸ்தூரிபட்டியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் காவியா 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு நாமக்கல் பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிவர படிக்காத காவியா நெருங்கி வரும் தேர்வுகளை கண்டு மிகுந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவுளைச்சலில் இருந்த காவியா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து புத்தாண்டு தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி சென்ற பெற்றோர் காவியா மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு காவியாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அள்ளிக்கபட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி காவியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த எருமப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |