Categories
உலக செய்திகள்

அதிரடி உத்தரவு….! “தடுப்பூசி போடாதவர்களின்” கவனத்திற்கு…. காலக்கெடு கொடுத்த ஜனாதிபதி….!!

பிரான்சில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற 15ஆம் தேதியிலிருந்து உணவகம் உட்பட எந்த வித பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் அந்நாட்டிலுள்ள அனைவரும் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதாவது வருகின்ற 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாத எவரும் உணவகம் உட்பட எந்தவித பொது இடங்களுக்கோ ரயில் போக்குவரத்து சேவைகோ செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பிரான்ஸின் ஜனாதிபதி தனிநபர்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சுகாதாரப் பாஸ்ஸை வைத்திருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என்பதை கருத்தில்கொண்ட பிரான்ஸின் ஜனாதிபதி மேல் குறிப்பிட்டுள்ள இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |