தமிழக அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் 193 பணியிடங்களுக்கான தேர்வு வேறு தேதியில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி 193 பணியிடங்களுக்கு நடைபெற இருந்த எழுத்து தேர்வு வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடங்கு ஊழியர் உள்ளிட்ட மற்ற பணியிடங்களுக்கு எழுத்து தேர்வுக்கான மாற்று தேதி நாளை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.