செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் சென்னையில் ஒரு 700 இடங்கள் தொடங்கி, தமிழ்நாடு முழுக்க ஒரே நாளில் 7,000 கேம் நடத்தியுள்ளனர். இதுவரை எந்த வரலாற்றிலும் இல்லை. இதன் தொடர்ச்சியாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இருந்தது, தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
சைதாப்பேட்டையில் தடுப்பூசி முகாம் நடத்துகின்ற இடத்தில் மழைக்கால சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதை முடித்துவிட்டு எக்மோர் செல்லும்போது மாநகராட்சி சார்பில் அங்கேயும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமும், தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக அந்த பணிகள் என்பது மழை முடிந்தும் கூட தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும்.
பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் பேசியிருக்கிறார்கள். அதை கொஞ்சம் வேகப்படுத்தி விரைவுப்படுத்தி முககவசம் போடாதவர்களை கண்டறிந்து, அந்த அபராத முறையை இன்னுமும் கூடுதலாக்குவதர்க்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
இப்போ என்னென்ன தேவைகள் என்று முழுமையாக கூறியிருக்கிறோம், கட்டுபாடுகளை ஆணையர் அறிவித்தார். மெரினா கடற்கரையில் காலையில் நடை பயிற்சி செல்பவர்களுக்கு மட்டும் தான் அனுமதி, மணல் பரப்பில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று கூறியிருக்கிறார்கள். இதேபோல் ஏற்கனவே பள்ளிகளில் எப்படி செயல்பட வேண்டும், திருமணங்களில் 100 பேர் மட்டும் தான் கூடவேண்டும், இறப்பு போன்றவற்றிற்கு 50 பேர் தான் கூட வேண்டும். இதுமாதிரி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கட்டுப்பாடுகள் சம்மந்தமான பல்வேறு விசயங்களை அறிவித்திருக்கிறார்.
எல்லாருக்குமே ஒரே மாதிரியான சிகிச்சை தான். ஒமிக்ரான இருந்தாலும் சரி, டெல்டாவா இருந்தாலும் சரி, டெல்டா பிளஸ்சா இருந்தாலும் சரி, இல்ல ஏற்கனவே வந்த வைரஸாக இருந்தாலும் ஒரே மாதிரியான சிகிச்சை தான். கொரோனாவில் இருந்து வருகின்ற மாறுபாடு தான் அதனால் சிகிச்சை முறையில் எந்தவித வேறுபாடும் இல்லை. இப்போ என்னவென்றால் விரைந்து நெகட்டிவ் வந்துருது, முன்னாடி வந்து 10 நாள் 11 நாள் வரைக்கும் நெகட்டிவ் வரல, செப்டம்பர் மாதம் எனக்கு வந்தபோது கூட ஒரு 12 நாள் கழித்து தான் எனக்கு நெகட்டிவ் வந்தது.
ஆனால் இப்போ 3 அல்லது 4 நாளிலேயே வந்துருது, இப்போ ஐ.சி.எம்.ஆர் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால் ஒரு 2 நெகட்டிவ் தொடர்ந்து…. 24 மணிநேரத்தில் சோதித்து 2 தடவை நெகட்டிவ் என்று வந்தால் வீட்டில் தனிமை படுத்துவதற்கு பரிந்துரை செய்கிறார்கள்.அந்த வகையில் இப்போது நடைமுறைபடுத்த போகிறோம் என தெரிவித்தார்.