Categories
அரசியல்

காவி வேட்டி, டி-சர்ட்டுடன்…. ராஜேந்திர பாலாஜிய அலேக்கா தூக்கிய காவல்துறை…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!

கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, அரசுத் துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி, 3 கோடியே 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்பிறகு, அவர் தலைமறைவானார். எனவே, காவல்துறையினர் அவரை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தென்காசி, கேரளா, டெல்லி, மதுரை, கோவை மற்றும் கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளுக்கு காவல்துறையினர் சென்று அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் கைதாகி இருக்கிறார். கைது செய்யப்படும் போது, காவி வேட்டியும் டி-ஷர்ட்டும் அணிந்துகொண்டு அவர் வாகனத்தில் ஏறும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இத்தனை நாட்களாக காவல்துறையினரிடமிருந்து தப்பித்து வந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடகத்தில் கைதானது  எப்படி? என்பது குறித்து, தனிப்படை அதிகாரி தெரிவித்திருப்பதாவது, கர்நாடகாவின் அரசியல் பிரமுகரின் உதவியால் தினமும் ஒவ்வொரு இடமாக ராஜேந்திரபாலாஜி மாறியிருக்கிறார்.

இந்நிலையில், இன்று ஹசன் செக் போஸ்டை கடந்திருக்கிறார். அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து அவரை பின் தொடர்ந்து சென்று கைது செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |