Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி…மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைகான  பரிசு தொகுப்பை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களுக்கு  வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில்  தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளான  பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தாசில்தார் பஞ்சாபிகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  அமைச்சர் ஆர்.கே பெரியகருப்பன் தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை 645 பயனாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

Categories

Tech |