Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

2 ஆண்டுகளுக்கு பிறகு…. அரிச்சல்முனையில் உருவான மணல்பரப்பு…. ஆர்வத்துடன் வரும் சுற்றுலாவினர்….!!

அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கி மணல் பரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வெறும் மணல் பரப்பாக இருந்து வந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மணல் பரப்பில் நடந்து சென்று கடல் அழகை ரசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கடல் அலையின் வேகத்தால் அப்பகுதியில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்த மணல் பரப்பு முழுவதிலும் கடல் நீர் சூழ்ந்து கடலாக மாறியுள்ளது.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக அரிச்சல்முனை தெற்கு கடற்கரை பகுதியில் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கி மணல்பரப்பு தெரிய தொங்கியுள்ளது. இதனால் அரிச்சல்முனைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மணல் பரப்பில் நடந்து சென்று கடல் அழகை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Categories

Tech |